Tuesday, March 13, 2007

307. கவாஸ்கரை உலுக்கிய ரிக்கி பாண்டிங்

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, Do not preach something that you cannot follow yourself என்று !  அதற்கு எதிர்மறையாக நடந்து கொண்டு கவாஸ்கர் 'நுணலும் தன் வாயாற் கெடும்' என்பதை நிரூபித்து விட்டார் ! என்ன மேட்டர் என்று கேட்கிறீர்களா ?

ஆஸ்திரேலிய அணியைப் பற்றி தன் திருவாய் மலர்ந்த கவாஸ்கர், "ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த, திறமை மிக்க, அணியாக கடந்த பத்து வருடங்களாக இருப்பினும், அணி வீரர்கள் சில சமயங்களில்
பண்பாடற்ற வகையில் நடந்து கொண்டு, பலரின் வெறுப்பைச் சம்பாதித்து உள்ளனர்" என்று கூறியுள்ளார்  !   கடுப்பான ஆஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் கவாஸ்கரை பிடித்து ஒரு வாங்கு வாங்கி விட்டார் :)  ஒரு முறை (1981) மெல்பர்னில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, அம்பயர் அவருக்கு தவறாக LBW கொடுத்து விட்டதாகக் கூறிக் கொண்டு, அப்போது கேப்டனாக இருந்த கவாஸ்கர் கொதிப்படைந்து, சக ஆட்டக்காரர் சேத்தன் சவானை இழுத்துக் கொண்டு களத்தை விட்டு வெளியேற முயன்றதை நினைவு கூர்ந்த பாண்டிங்,

"எனக்குத் தெரிந்தவரையில் (கவாஸ்கர் தவிர்த்து) எந்த ஒரு அணித்தலைவரும், சக ஆட்டக்காரரை இழுத்துக் கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளிநடப்பு செய்ய முயன்றதில்லை !  அவ்வாறு செய்த ஒருவர், பிறருக்கு இவ்வளவு போதனை செய்யலாமா !  எல்லாரையும், எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது எங்களுக்கு (அணிக்கு) இயலாத காரியம் !  ஆனால், கௌரவமற்ற செயல்களைச் செய்தவர்கள், இப்படி எங்களை கடிந்துரைப்பது மிகையான, சற்று திமிரான செயலாகவே தோன்றுகிறது. 
எங்கள் அணி பல வருடங்களாக ஒரு வெற்றி அணியாக இருப்பதே, எங்கள் மேல் ஒருவித வெறுப்பு நிலவுவதற்குக் காரணம், இது கூட இயற்கையான வெளிப்பாடே ! 

கவாஸ்கர் ஆஸ்திரேலிய அணியை விமர்சனம் செய்வதை விடுத்து, சர்வதேச அளவில் இந்திய அணியின் ரெக்கார்டை முன்னேற்றுவதில் தன் கவனத்தை செலுத்தினால் நல்லது !  (எங்களை விமர்சிப்பவர்கள்) எங்கள் மேல் செலுத்தும் கவனத்தை, தங்கள் (தங்கள் அணி) ஆட்டத் திறனை வளர்ப்பதில் செலுத்தினால் நல்ல பலன் இருக்கும் ! பல காலமாக, பிற அணிகள் வெல்ல முடியாத / சிரமப்படுகின்ற ஒரு அணியாக ஆஸ்திரேலியா இருப்பதால் தான், எங்கள் அணிக்கு ஆதரவாளர்கள் குறைவாக உள்ளனர் !!! அவ்வளவு தான் மேட்டர்"

என்று ஒரே போடாக போட்டு, கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  கவாஸ்கரே இந்த 'பாண்டிங்' தாக்குதலை எதிர்பார்த்திருக்க மாட்டார் !  அவர் என்ன கூறப்போகிறார் என்று பார்ப்போம் !  ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே !  ஒங்களைச் சொல்லலீங்க, என்னயத் தான் சொல்லிக்கறேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 307 ***

 

14 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

dondu(#11168674346665545885) said...

கவாஸ்கர் முறைதவறி நடந்த அந்தக் காட்சியை நானும் தொலைகாட்சியில் பார்த்தேன். கவாஸ்கர் மௌனமாக இருப்பதே அவருக்கு நலம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

-L-L-D-a-s-u said...

பாலா,

இந்திய அணியை கரைசேர்க்கும் பொறுப்பு ஆஸ்திரேலியரான சாப்பலுக்குத்தான் உண்டு, கவாஸ்கருக்கு இல்லை . கவாஸ்கரை ஒரு விமர்சகராத்தான் பார்க்கவேண்டும் . அவருக்கு பதிலடி கொடுக்க பாண்டிங்க்கு உரிமையிருந்தாலும், இந்திய அணியை ஏன் அவர் தேவையில்லாமல் இழுக்கவேண்டும் . எல்லாம் தந்திரம்

enRenRum-anbudan.BALA said...

டோண்டு,
வருகைக்கு நன்றி. கிரிக்கெட் ரசிகரா தாங்கள் ?

வராது வந்த மாமணி தாஸு அவர்களே,

நன்றி. சாப்பலுக்கு தான் பொறுப்பு என்று நீங்கள் கூறுவது சரி தான் ! ஆனாலும், கவாஸ்கர் இப்படி வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதில்லை :(

Sridhar Narayanan said...

ஆச்சர்யமாக இருக்கிறது உங்கள் பதிவு.

ஆஸ்திரேலிய அணி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா?

கவாஸ்கர் தற்போது ஒரு விமர்சகராக அவரது பார்வையில் ஆஸ்திரேலிய அணியை பற்றி விமர்சித்திருக்கிறார். அவ்வளவே! இப்பொழுது என்று இல்லை, இதே விமர்சனத்தை நிறைய முறை சொல்லி இருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணி ஸ்லெட்ஜிங் என்ற ஒரு un-professional முறையில் எதிரணியினரை மனச் சோர்வடைய செய்வதில் கை தேர்ந்தவர்கள். ஒரு முறை அல்ல இரு முறை அல்ல, ஏறக்குறைய எல்லா முறைகளும்.

காவஸ்கர் ஒரே ஒரு முறை வெளிநடப்பு செய்திருக்கிறார் (அதற்கான காரணத்தையும் தற்பொழுது சொல்லியிருக்கிறார்). அதற்காக அவர் ஆஸ்திரேலிய அணியினரின் அடாவடி (ஆமாம்! அது அடாவடி attitude-தான்) போக்கை விமர்சிக்க கூடாது என்று சொல்வது என்ன தன்மை என்று தெரியவில்லை.

உடனே nothing is fair in love and war என்று ஜல்லியடிக்காதீர்கள். அதையும் அவர் தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆஸ்திரேலியா நன்றாக ஆடி ஜெயிக்கும் அணி. ஆனால் எல்லாருக்கும் 'பிடித்தமான' அணி கிடையாது. (They are not 'popular' for their on-field behaviour).

enRenRum-anbudan.BALA said...

Sridhar,

வாங்க ! கருத்துக்கு நன்றி ! என்ன, ரொம்ப கோவமா இருக்கீங்க போலத் தெரியுது ?

என்னளவில், கவாஸ்கர் இந்த விவகாரத்தை இப்ப கிளப்பியிருக்க வேண்டம், அவ்வளவு தான் !

பாண்டிங்கும், அவரது அணியும் புனிதப் பசுக்கள் அல்லர் என்பது உண்மையே :)

மணிகண்டன் said...

//காவஸ்கர் ஒரே ஒரு முறை வெளிநடப்பு செய்திருக்கிறார் (அதற்கான காரணத்தையும் தற்பொழுது சொல்லியிருக்கிறார்). அதற்காக அவர் ஆஸ்திரேலிய அணியினரின் அடாவடி (ஆமாம்! அது அடாவடி attitude-தான்) போக்கை விமர்சிக்க கூடாது என்று சொல்வது என்ன தன்மை என்று தெரியவில்லை.
//

உண்மை தாங்க. அவர் ஒரு தடவை வெளிநடப்பு செய்தாருங்கறதால் அடுத்தவங்களை விமர்சிக்க கூடாதா? பாண்டிங் ஒரு பண்பான, முதிர்சியுடைய கேப்டனா இருந்திருந்தா, அவரோட குற்றசாட்டுக்கு தகுந்த பதிலோ மறுப்போ சொல்லியிருக்கலாமே தவிர, அவர் என்ன ஒழுங்கா, எங்களை விமர்சணம் பண்றதுக்குங்கற மாதிரி பேசியிருக்கக்கூடாது.

said...

i am not a blogger/don't have a blogger account. that said will you publish my comment? or you will say 'i am not qualified to post a comment in blogs just b'coz i am not a blogger????

just to critisize/say the facts out loud, you don't have to be a Jesus/Mahatma.

thalaivar stylla "ithu eppdi irukku" hahahaaa!!!

-L-L-D-a-s-u said...

ஐயோ வராது வந்த மாமணீ இல்லைங்க வருவேன. பின்னூட்டாமிட பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. :)

Sridhar Narayanan said...

கோவம் எல்லாம் இல்லீங்க...

பல message board-ல் பெரும்பாலும் இந்தியர்களிடம் இந்த சம்பவத்தில் கவாஸ்கரையே குறை காணும் போக்கு தெரிந்தது. அதுதான் புரியவில்லை.

'இந்திய கிரிக்கெட்டின் அடிமை தன்னிலை' என்று எழுதிய நீங்களும் அப்படி எழுதியதினால் உங்களுக்கு உடனடி பின்னூட்டம் இடத் தோன்றியது.

மேற்கிந்திய தீவுகள் அணியையும் (1983), ஆஸ்திரேலிய அணியையும் (2007) ஒப்பிட்டு அவர் சொல்லியிருந்தது மிக நன்றாக இருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 1983-ல் invincible-ஆக பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் அவர்கள் களத்தில் ஒரு professional-ஆகவே ஆடி வந்தார்கள். அதனால் அவர்கள் மிக பிரபலமாகவும் இருந்தார்கள். தற்சமயம் ஆஸ்திரேலிய அணியினர் அதைப் போன்ற ஒரு invincible நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மேற்கிந்திய தீவுகள் போல அவ்வளவு பிரப்லம் இல்லை. ஏனென்றால் அவர்களி களத்தில் கடைபிடிக்கும் ஸ்லெட்ஜிங் போன்ற முறைகள்.

நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் out-of-context-ல் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது.

ஆஸ்திரேலியரின் ஸ்லெட்ஜிங் போக்குக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கினறன. அது தவறோ சரியோ, அதைப் பற்றி பல நேரங்களிலும் கவாஸ்கர் விமர்சித்தே வந்திருக்கிறார்.

பின்னூட்டம் வெளியிட்டதற்கு நன்றி!

enRenRum-anbudan.BALA said...

மணிகண்டன்,
தீவிர கிரிக்கெட் ரசிகர் நீங்க கருத்து சொன்னதுக்கு நன்றி. நீங்க சொல்றது சரி தான், பாண்டிங் சற்று நிதானமா கருத்து சொல்லியிருக்கலாம் தான், கோபம் கண்ணை மறைச்சுருச்சு ! மேலும், தேவையில்லாம, இந்திய அணியை வேறு வம்புக்கு இழுத்து விட்டிருக்காரு !

Anony,
Your logic is fine :) You don't have to be a hen to tell your opinion on an EGG OMLETTE ;-) How is it ? :))))

தாஸ¤,
//ஐயோ வராது வந்த மாமணீ இல்லைங்க வருவேன. பின்னூட்டாமிட பொறுமையும் நேரமும் இருப்பதில்லை. :)
//
நாமெல்லாம் பழைய நண்பர்கள் இல்லையா ? சும்மா கலாய்ச்சேங்க :)

ஸ்ரீதர் வெங்கட்,
மீள்வருகைக்கும், நீண்டதோர் பின்னூட்டத்திற்கும் நன்றி.

//'இந்திய கிரிக்கெட்டின் அடிமை தன்னிலை' என்று எழுதிய நீங்களும் அப்படி எழுதியதினால் உங்களுக்கு உடனடி பின்னூட்டம் இடத் தோன்றியது.

//
சும்மா நச்சுன்னு பாயிண்டை பிடித்து விட்டீர்கள் ! அந்த பதிவு எழுதும்போது சம்ம கடுப்புல இருந்தேன் என்பது உண்மை தான் !

பெருமளவில், உங்களோடு ஒத்துப் போகிறேன்.
**************************

enRenRum-anbudan.BALA said...

Today, Border has blasted Gavaskar for his views ! The BIG FIGHT goes on :)))

I will post about that later, please wait !

ஓகை said...

காவஸ்கர் தவறு செய்தது போண்டிங் செய்யும் தவறுகளுக்கு லைசென்ஸா? சுட்டிக்காட்டப்பட்ட தவறுக்கு பதில் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் விமர்சித்தவரை சாடுவது வடிகட்டிய திமிர்த்தனம். விர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தம்மை நினைப்பவர்களின் செயல்பாடுகளும் இப்படித்தான் இருக்கும்.

பொண்டிங் என்ன நினைக்கிறார்? ஆடுவதில் இருக்கும் திறமைக்காக அவர்களின் மற்ற செயல்பாடுகளை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றா? காலனியாதிக்க காலங்களின் தினவு மொத்தமாக உருண்டு திரண்டு பொண்டிங் போன்றவர்களின் தலையில் ஏறியிருக்கிறது.

enRenRum-anbudan.BALA said...

//
ஓகை said...

பொண்டிங் என்ன நினைக்கிறார்? ஆடுவதில் இருக்கும் திறமைக்காக அவர்களின் மற்ற செயல்பாடுகளை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றா? காலனியாதிக்க காலங்களின் தினவு மொத்தமாக உருண்டு திரண்டு பொண்டிங் போன்றவர்களின் தலையில் ஏறியிருக்கிறது.
//

I have mentioned about this "RACISM" aspect in the subsequent posting on this matter !

Thanks for your visit and views.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails